தூத்துக்குடியில் உலக பிசியோதெரபி தினவிழா

தூத்துக்குடி மாவட்ட இந்திய பிசியோதெரபிஸ்ட் சங்கம் சார்பில் உலக பிசியோதெரபி தினவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2021-09-09 13:40 GMT
தூத்துக்குடி, செப்.10-
தூத்துக்குடி மாவட்ட இந்திய பிசியோதெரபிஸ்ட் சங்கம் சார்பில் உலக பிசியோதெரபி தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் முகமது நசீர் தலைமை தாங்கினார். டாக்டர் சினோ பிபியானா வரவேற்று பேசினார். விழாவில் பாரா விளையாட்டு துறையில் தேசிய அளவில் தங்கபதக்கம் வென்ற முத்துமீனா, மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் 2-வது இடம் பிடித்த விஷ்ணு ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் நடக்க இயலாதவர்களுக்கு உபகரணங்களும், இடுப்பு வலி உள்ளவர்களுக்கு பெல்ட் மற்றும் மூட்டு வலிக்கு கால் உறையும் பல நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
விழாவில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தமிழக அரசு பிசியோதெரபி டாக்டர்களை பங்கு பெற வைத்து உள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் தற்காலிக பணியில் இருக்கும் பிசியோதெரபி டாக்டர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
விழாவில் பிசியோதெரபி டாக்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  டாக்டர் சையத் அலி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்