தனியார் மண்டபத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

தனியார் மண்டபத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்.

Update: 2021-09-10 16:37 GMT
கோத்தகிரி,

கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ள வேண்டும், உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட ஜெகதளா ஒசட்டி கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடந்தது. அங்கு உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றதாக தெரிகிறது. 

இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன் உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர் பழனிசாமி, கிராம உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் 

அப்போது கொரோனா விதிமுறைகளை மீறி திருமண நிகழ்ச்சியில் உரிய சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிக பொதுமக்கள் பங்கேற்றது உறுதியானது. இதனையடுத்து மண்டப உரிமையாளரான அமானுல்லா என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் செய்திகள்