கொங்கணாபுரத்தில் ரூ.26 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

கொங்கணாபுரத்தில் ரூ.26 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.

Update: 2021-09-11 21:04 GMT
எடப்பாடி
எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் இயங்கி வரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. கடந்த சில நாட்களாக எடப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் ஏலத்தில் குறைவான விவசாயிகள் மற்றும் வியாபாரிகளே கலந்து கொண்டனர். 
இதில் சுரபி ரக பருத்தி குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 600 முதல் ரூ.10 ஆயிரத்து 100 வரையிலும், பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 450 முதல் ரூ.8 ஆயிரத்து 100 வரையிலும் விற்பனையானது. மொத்தமாக 1,200 மூட்டைகள் பருத்தி ரூ.26 லட்சத்துக்கு ஏலம் போனது.

மேலும் செய்திகள்