திருவண்ணாமலையில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு

விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு

Update: 2021-09-12 18:58 GMT
திருவண்ணாமலை

விநாயகர் சதுர்த்தி விழா 10-ந்தேதி கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்றால் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட, பூஜைகள் முடிந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்க அரசு தடை விதிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து, அவற்றை நீர் நிலைகளில் கரைக்க அனும
தி அளிக்கப்பட்டது. 

அதன்படி திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தி அன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை ெகாண்டு வந்து ஈசான்ய குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைத்தனர்.

முன்னதாக நீர் நிலைகளுக்கு கொண்டு வந்த விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு, தண்ணீரில் கரைத்தனர். 
இதேேபால் போளூரில் விநாயகர் சதுர்த்தி விழா அன்று பொதுமக்கள், பக்தர்கள் தங்களின் வீடுகளில் சிறிய அளவில் களி மண்ணால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். அந்த சிலைகளை 3-வது நாளான ேநற்று நீர் நிலைகளில் கொண்டு வந்து கரைத்தனர்.

மேலும் செய்திகள்