தென்னை மரத்தை தாக்கும் கூண் வண்டு

தென்னை மரத்தை தாக்கும் கூண் வண்டு

Update: 2021-09-13 15:57 GMT
தாராபுரம், 
 தாராபுரம் வட்டார பகுதியில் 3,750 ஹக்டர் நிலப்பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது சிவப்பு கூண் வண்டுகளின் தாக்குதல் அறிகுறிகள் தென்பட்டன. இந்த தென்னை மரங்களை தாராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் லீலாவதி ஆய்வு மேற்கொண்டார். அதன் அடிப்படையில் அலங்கியம் பகுதியில் தென்னை மரங்களை ஆய்வு செய்யப்பட்டு அதற்கு உண்டான தீர்வு காணப்பட்டு வருகிறது. அவ்வாறு கூண்வண்டு தாக்குதலுக்கு ஆளான தென்னை மரங்கள் அடிப்பரப்பில் பழுப்பு நிற சாறு வடிந்து துளைகள் காணப்படும். உள் இலைகள் உள் மஞ்சள் நிறமாகும். நுனிப் பகுதியிலுள்ள நடுக்குருத்து வாட ஆரம்பிக்கும்.
கூன் வண்டுகளால் தாக்கப்படும் மரங்களின் துறையில் 5மில்லி டைகுளோன்வாஸ் மருந்தை சம அளவு தண்ணீரில் கலந்து துளையில் செலுத்திய பிறகு கரி மண் அல்லது சிமெண்ட் வைத்து துளைகளை மூட வேண்டும் என உதவி இயக்குனர் தெரிவித்தார். அப்போது வேளாண் அலுவலர் மணி, துணை வேளாண்மை அலுவலர் சின்னத்தம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்