ஸ்கிரீன் ஷாட் போட்டோவை வைத்து பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது

ஸ்கிரீன் ஷாட் போட்டோவை வைத்து பெண்ணை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-13 17:21 GMT
அரியலூர்
மீன்சுருட்டி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விருதாச்சலம் ரோடு தெருவை சேர்ந்தவர் ராஜவேல். இவருடைய மனைவி கீதா(வயது 41). இவருடைய கணவர் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் இரண்டு சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வருகின்றார். கீதாவின் முகநூலில், மீன்சுருட்டி அருகே உள்ள ஒடப்பேரி தெற்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆனந்தகுமார்(26) என்பவர், கீதா கொடுத்திருந்த முகநூல் முகவரி பக்கத்தில் நண்பராக ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுள்ளார். பின்னர் முகநூல் பக்கத்தில் கீதா ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று ஆனந்தகுமார் முகநூல் மெசேஜ்சரில் போன் செய்து பேசியதாகவும், ஆனந்தகுமார் க்ரைம் போலீசில் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 8-ந்தேதி போன் செய்து வீடியோ காலில் வந்து நீ அழகாக இருக்கிறாய் என பேசியுள்ளார். அப்போது எனது சேலை விலகி இருந்த போது ஆனந்தகுமார் ஸ்கிரீன் ஷாட் எடுத்ததாக தெரிகிறது. ஸ்கிரீன் ஷாட் போட்டோவை வைத்து கொண்டு தொடர்ந்து கீதாவை மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து கீதா கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்