உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம் நடைபெற்றது.

Update: 2021-09-14 15:26 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு நேதாஜி நற்பணி இயக்க தலைவர் மா.பாலமுருகன் தலைமையில், வீரவிடுதலை மக்கள் இயக்க பொதுச்செயலாளர் முருகேசன், ரத்தினவேல், கிருஷ்ணசாமி, அரசுராஜ், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் திரண்டு வந்தனர். அலுவலகம் முன்பு ஒருவரை இறந்தவர் போல் படுக்க வைத்து, அவர் உடலுக்கு சங்கு ஊதி அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடத்தினர். பின்னர் உதவி கலெக்டர் சங்கர நாராயணனிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருந்த தாவது:-
கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸூக்கு சிலை அமைக்க வேண்டும். அவரது பெயரில் நடந்த ஆட்டுச்சந்தையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். நகராட்சிக்கு பொது மயானத்தில் தண்ணீர், கழிப்பிடம், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும், என கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்