திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-14 15:38 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாநில துணை தலைவியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவி ஜானகி, செயலாளர் ராணி, துணை தலைவிகள் பழனியம்மாள், ராஜேஸ்வரி, மாநிலக்குழு உறுப்பினர் வனஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மகாத்மாகாந்தி தேசிய வேலைஉறுதி திட்டத்தை பேரூராட்சிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். மேலும் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ரேஷன்கடைகளில் பயோமெட்ரிக் குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும். அதேபோல் நகர்ப்பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்