சிக்கன் பக்கோடா கடைக்காரர் அடித்துக்கொலை

நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சிக்கன்பக்கோடா வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-09-14 18:22 GMT
காவேரிப்பாக்கம்

நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சிக்கன்பக்கோடா வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாகப்பிரிவினை

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த கோவிந்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 45). சிக்கன் பக்கோடா கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கங்கா (40). இவர்களுக்கு சிதம்பரம் (19) என்ற மகனும், 17வயதில் ஒரு மகளும் உள்ளனர். 
இதே பகுதியில் வசிக்கும் பங்காளி உறவு முறையான கிருஷ்ணன் (75) குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (65). இவர்களுக்கு உனேஷ் (35) அன்பு (32) என்ற மகன்கள் உள்ளனர்.
ரங்கநாதன் குடும்பத்தினருக்கும் கிருஷ்ணன் குடும்பத்திற்கும் இடையே நிலம் பாகப்பிரிவினை சம்மந்தமாக கடந்த பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.மோதல்
இந்த நிலையில் நேற்று நிலம் பாகபிரிவினை பிரச்சினை தொடர்பாக 2 குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது,

இதில் உமேஷ், அன்பு ஆகியோர் இரும்பு குழாயால் ரங்கநாதனை தாக்கினர். மேலும் கிருஷ்ணன், கிருஷ்ணவேணியும் அவரை உதைத்தனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ரங்கநாதனை மனைவி கங்கா, மகன் சிதம்பரம் ஆகியோர் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூருக்கு 108 ஆம்பூலன்ஸ் மூலம் டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். 
ஆனால் வழியிலேயே ரங்கநாதன் உடல்நிலை மோசமானதால் அவரை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். .அங்கு பரிசோதனை செய்தபோது ரங்கநாதன் ஏற்கனவே டாக்டர்கள் தெரிவித்தனர். 

4 பேர் கைது

சம்பவம் குறித்து பாணாவரம் போலீஸ் நிலையத்தில் கங்கா புகார் அளித்தார்.
அதன்பேரில் பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணன் (75), மனைவி கிருஷ்ணவேணி (65) மகன்கள் உமேஷ் (35) அன்பு (32) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்