கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல்

காரைக்குடி பகுதியில் உள்ள ஓட்டல்களில் கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-09-14 18:28 GMT
காரைக்குடி,

காரைக்குடி பகுதியில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஒரு சில அசைவ ஓட்டல்களில் பல நாட்களுக்கு முன்பு குளிரூட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த மீன் மற்றும் இறைச்சி, கோழி இறைச்சி, மசாலா கலக்கப்பட்ட உணவு பொருட்கள் உள்ளிட்ட 100 கிலோ கெட்டு போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவை காரைக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. கெட்டு போன உணவு பொருட்கள் வைத்திருந்த ஓட்டல் உரிமையாளர்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரித்தனர். இது போன்ற உணவு பொருட்களை பயன்படுத்துவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, தரமான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அறிவுறுத்தினர்.இந்த ஆய்வின் போது உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன், உதவியாளர் கருப்பையா, மாணிக்கம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்