மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் ெசய்யப்பட்டன

Update: 2021-09-14 21:08 GMT
கறம்பக்குடி
கறம்பக்குடி அருகே உள்ள கீராத்தூர் பகுதியில் இருந்து மணல் கடத்தி செல்லப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கிராம நிர்வாக அதிகாரி பாலசந்தர் மற்றும் ஊழியர்கள் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீராத்தூர் பிரிவு சாலை அருகே சென்ற மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, அதில் காட்டாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன்பேரில், அந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்த கிராம நிர்வாக அதிகாரி அதனை ரெகுநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில், ரெகுநாதபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல, வடகாடு அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து தலைமையிலான போலீசார் மாங்காடு மழவராயன் தெரு பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக மாட்டு வண்டியில் எம்.சாண்ட் மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு அதனை ஓட்டி வந்தவர் தப்பி ஓடி விட்டார். அந்த மாட்டுவண்டியை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடியவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

மேலும் செய்திகள்