முத்தாரம்மன் கோவில் கொடை விழா

மாவடிப்பண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது.

Update: 2021-09-15 14:15 GMT
தென்திருப்பேரை:
மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் ஆவணி கொடை விழா கடந்த 13-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. முதல் நாள் இரவு வில்லிசை நடைபெற்றது  காலை 8 மணிக்கு நேர்த்திக்கடன் செலுத்த உள்ளவர்கள் வீடுகளுக்குச் சென்று கோவிலுக்கு மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டனர்.  காலை 11 மணிக்கு பால்குடம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவில் வந்து சேர்ந்தது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு கோவிலுக்கு முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வந்து சேர்த்தனர் பின்னர் கற்பூர தீப ஆராதனை நடைபெற்றது இரவு 11 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.  12 மணிக்கு சிறப்பு வாணவேடிக்கை நடைபெற்றது. அதன் பின்னர் அம்மன் வீதியில் உலா வரும் காட்சி நடைபெற்றது.  பக்தர்கள் அவரவர் வீட்டு முன் அம்மனை வழிபட்டு தேங்காய் பழம் உடைத்து மாலை சாட்டினர். அதன்பின் சப்பரம் கோவிலை வந்தடைந்தது. நேற்று காலை 8 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 10 மணிக்கு பக்தர்கள் கோவிலுக்கு வந்து பொங்கலிட்டனர்.  ஒரு மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் பொங்கலிட்டு பானையை எடுத்து சென்றனர். விழா நாட்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்