ஊட்டியில் குழிக்குள் தவறி விழுந்து குதிரை பலி

ஊட்டியில் குழிக்குள் தவறி விழுந்து குதிரை பலி

Update: 2021-09-15 15:11 GMT
ஊட்டி

ஊட்டி கமர்சியல் சாலையோரத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அதன் முன்பு மின்கம்பம் நடுவதற்காக குழி தோண்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சாலையில் நடமாடிய குதிரை ஒன்று குழிக்குள் தவறி விழுந்து இறந்தது. 

நேற்று வழக்கம்போல் அந்த வழியாக பொதுமக்கள் நடமாடிய போது, கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் ஊழியர்கள் குழிக்குள் விழுந்து இறந்த குதிரையை வாகனத்தில் ஏற்றி தீட்டுக்கல் குப்பை கிடங்குக்கு கொண்டு சென்றனர்.

 ஊட்டி நகரில் குதிரை போன்ற கால்நடைகள் உலா வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும், அதன் உரிமையாளர்கள் பின்பற்றாமல் உள்ளனர். இதனால் வளர்ப்பு குதிரைகள் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்து வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்