மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,899 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,899 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

Update: 2021-09-17 21:38 GMT
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  வினாடிக்கு 17,899 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
மேட்டூர் அணை
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 521 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. 
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. அதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.  
அதிகரிப்பு
அதன்படி நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரத்து 899 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 16 ஆயிரத்து 750 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 74.18 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 74.27 அடியாக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்