தஞ்சை திருவாரூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் தஞ்சை திருவாரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டனர். எனவே ரெயில்வே மேம்பால பணிகளை தொடங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-09-20 18:10 GMT
நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டது
தஞ்சை திருவாரூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
ரெயில்வே மேம்பால பணிகளை தொடங்க கோரிக்கை
நீடாமங்கலம்;
நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் தஞ்சை திருவாரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டனர். எனவே ரெயில்வே மேம்பால பணிகளை தொடங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
போக்குவரத்து பாதிப்பு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரெயில் நிலையத்தில் நேற்று காலை காலிபெட்டிகளுடன் கூடிய சரக்குரெயில் வந்தது. தொடர்ந்து திருவாரூர் பகுதியிலிருந்து தஞ்சாவூர் நோக்கி சரக்குரெயில் சென்றது. இதைத்தொடர்ந்து விரைவு ரெயில் வந்தது. இதனால் ரெயில்வேகேட் சுமார் ஒரு மணி நேரம் மூடப்பட்டிருந்தது. எனவே தஞ்சை திருவாரூர் சாலையில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் மாலையில் எர்ணாகுளம் விரைவு ரெயிலுக்காக ரெயில்வேகேட் மூடப்பட்டது. அதன் பின் அரிசி ஏற்றிய சரக்கு ரெயில் புறப்படும் பணி நடந்தது. இந்தபணி முடிந்து சுமார் 1 மணி நேரம் கழித்து ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. இதனால் மாலையும் நீடாமங்கலம் நகரில் நெடுஞ்சாலை போக்குவரத்து சுமார் ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். 
ரெயில்வே மேம்பால பணிகள்
இந்தநிலையை போக்க கிடப்பில் போடப்பட்டுள்ள நீடாமங்கலம் மேம்பாலம் திட்டத்தை தொடங்க மத்திய, மாநிலஅரசுகள்நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தஞ்சாவூர் முதல் நாகப்பட்டினம் வரையிலான இருவழிச்சாலைத்திட்டத்தை  துரிதப்படுத்த வேண்டும். மேலும்
நீடாமங்கலம் பேரூராட்சியையும் வையகளத்தூர் தேசியநெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் பழையநீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டுவரும் போக்குவரத்து பாலப்பணியையும், நீடாமங்கலம், மன்னார்குடி நெடுஞ்சாலையையும், கொத்தமங்கலம் சாலையையும் இணைக்கும் வகையில் தட்டி கிராம பகுதியில் கோரையாற்றில் கட்டப்பட்டு வரும் போக்குவரத்து பாலப்பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும் என  பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்