திண்டிவனம் பகுதியில் வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

Seizure of liquor bottles மதுபாட்டில்கள் பறிமுதல் திண்டிவனம் பகுதியில் வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-09-21 17:25 GMT
திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தனி தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆட்சிப்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சாக்கு மூட்டையுடன் நின்றிருந்த ஒருவரை பறக்கும் படை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரிக்க முயற்சித்தனர். 

அதற்குள் அந்தநபர் சாக்கு மூட்டையை அங்கு போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அந்த சாக்கு மூட்டையை ஆய்வு செய்தபோது, அதில் 32 மது பாட்டில்கள் இருந்தது. 

விசாரணையில் தப்பி ஓடியவர், ஆட்சிப்பாக்கத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 43) என்பதும், வாக்காளர்களுக்கு வழங்கும் வகையில் மதுபாட்டில்கள் எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. மதுபாட்டில்களை கைப்பற்றிய அதிகாரிகள், இது குறித்த கிருஷ்ணமூர்த்தி மீது ஒலக்கூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்