உள்ளிருப்பு போராட்டம்

4 மாதம் சம்பளம் வழங்காததை கண்டித்து ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் 2வது நாளாக நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-21 21:02 GMT
ஒரத்தநாடு;
4 மாதம் சம்பளம் வழங்காததை கண்டித்து ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் 2வது நாளாக நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு கல்லூரி
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த பாரதிதாசன் மகளிர் கல்லூரி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக தமிழக அரசால் மாற்றம் செய்யப்பட்டது
இந்தநிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் நியமனம் செய்யப்பட்டு தற்போது ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் 128 பேர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. 
உள்ளிருப்பு போராட்டம்
இதை கண்டித்தும் நிலுவையிலுள்ள சம்பளத்தை விரைவில் வழங்க வலியுறுத்தியும் கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் நேற்று 2&வது நாளாக ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்