தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லையை சேர்ந்த தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2021-09-21 22:22 GMT
நெல்லை:
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் துவரைஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் வெள்ளப்பாண்டி (வயது 45). தொழிலாளியான இவர் மீது நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதனால் இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாநகர சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார், உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார், நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் ஏற்று வெள்ளப்பாண்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம், இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழங்கினார்.


மேலும் செய்திகள்