மரக்கன்றுகள் நடும் பணி

ஆனையூர் பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

Update: 2021-09-25 20:09 GMT
சிவகாசி, 
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட ஆனையூர் பஞ்சாயத்தில் சமத்துவபுரம் உள்ளது. கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சமத்துவபுரத்தில் தற்போது 100 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு என ரேஷன்கடை, நூலகம், அங்கன்வாடி, சமுதாயகூடம் ஆகிய வசதி களை பஞ்சாயத்து நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை சமத்துவபுரத்துக்கு சென்ற ஆனையூர் பஞ்சாயத்து தலைவர் லயன் லட்சுமிநாராயணன் அங்கு குடியிருக்கும் மக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது கடந்த 24 ஆண்டு களுக்கு முன்னர் கட்டப்பட்ட சில கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில் அதை சரி செய்யவும், புதிய கட்டிடங்களை கட்டிக்கொடுக்கவும் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட பஞ்சாயத்து தலைவர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரி களை நேரில் சந்தித்து குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் சமத்துவ புரத்தை சுற்றி உள்ள காலி இடங்களில் 200 மரக்கன்றுகளை நடும் பணியினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் முத்துமாரி, ஊராட்சி செயலர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்