வேப்பனப்பள்ளி அருகே மாமியார் வீட்டு அருகில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் விபரீத முடிவு

வேப்பனப்பள்ளி அருகே மாமியார் வீட்டு அருகில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-26 18:57 GMT
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே மாமியார் வீட்டு அருகில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கூலி தொழிலாளி
கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் மாவட்டம் பங்காருபேட்டை அருகே உள்ள கொங்கரப்பள்ளியை சேர்ந்தவர் ரகு (வயது 32), கூலிதொழிலாளி. இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.
கணவன்& மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ரகுவின் மனைவி தன்னுடைய தாய் வீடான கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நாடுவனப்பள்ளிக்கு சென்று விட்டார்.
விஷம் குடித்து தற்கொலை
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி வேப்பனப்பள்ளிக்கு வந்த ரகு, தன்னுடைய மனைவியிடம், இனி நமக்குள் பிரச்சினை வேண்டாம். சமாதானமாக செல்வோம் என்று சமரசம் பேசியதோடு, குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு ரகுவின் மனைவி மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
குடும்பம் நடத்த மனைவி வர மறுத்து விட்டாரே என்று ரகு மனம் உடைந்தார். உடனே வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், விஷம் வாங்கி விட்டு மாமியார் வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தடிக்கு வந்தார். அங்கு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், ரகுவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் மனம் உடைந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்