மணல் மூட்டைகள் ஏற்றி வந்த சரக்கு வேன் பறிமுதல்; டிரைவர் கைது

மணல் மூட்டைகள் ஏற்றி வந்த சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-09-26 20:17 GMT
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் மணவாளன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டகரம் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் (வயது 41) கொடுத்த தகவலின்பேரில் நடத்திய சோதனையில் மீன்சுருட்டி அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தின் அருகே சரக்கு வேனில் 30 மணல் மூட்டைகள் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரித்தபோது, அவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சின்னபுங்கநிதி கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரம்(37) என்பதும், அனுமதியின்றி மணல் மூட்டைகளை ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து மீன்சுருட்டி போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் மணவாளன் வழக்குப்பதிவு செய்து, பாலசுந்தரத்தை கைது செய்து மணல் மூட்டைகளுடன் சரக்கு வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்