பாசன தண்ணீரை வெளியேற்றுவதில் பிரச்சினை: தீக்குளித்த விவசாயிக்கு தீவிர சிகிச்சை

தீக்குளித்த விவசாயிக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2021-09-30 18:25 GMT
கீரமங்கலம்:
அறந்தாங்கி அருகே மாணவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் (வயது 60). விவசாயி. இவருக்கு வேதியன்குடி கரம்பைக்குளம் பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள பல வயல்களும் இந்த குளத்தில் இருந்து தண்ணீர் மூலம் பாசனம் பெருகிறது. மேலும் குளத்து தண்ணீரை பயன்படுத்தி சிலர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் உபரிநீரை வெளியேற்றினால் மேட்டுப்பகுதியில் உள்ள வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாது என்று மீனாட்சிசுந்தரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று மீனாட்சிசுந்தரம் மாணவநல்லூர் கோவில் அருகே வரும் போது அதே ஊரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மற்றும் முத்தரசன் ஆகியோர் தன்னை அவதூறாக பேசியதாக கூறி தனது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்