படப்பையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.;

Update:2021-10-02 13:30 IST
அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு சென்னையில் இருந்து நேற்று மாலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், காரில் புறப்பட்டு சென்றார். படப்பையில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட பிரதிநிதி மாரி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் மாலா புண்ணியக்கோட்டி, குமார் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மேலும் செய்திகள்