மேலப்பாளையம் கால்நடை சந்தையில் குவிந்த வியாபாரிகள் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Update: 2021-10-05 22:40 GMT
நெல்லை:
மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வியாபாரிகள் குவிந்தனர். முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வாரச்சந்தை
நெல்லை மேலப்பாளையத்தில் மாநகராட்சி சார்பில் கால்நடை சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரத்தில் திங்கட்கிழமை தோறும் மாடுகள் விற்பனையும், செவ்வாய்க்கிழமை தோறும் ஆடு, கோழி மற்றும் பிற பொருட்கள் விற்பனையும் நடைபெறும். இங்கு ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து விற்பனை செய்தும், வாங்கியும் செல்வார்கள்.
கட்டணம் உயர்வு
இந்த நிலையில் மாநகராட்சி சார்பில், சந்தைக்கு கொண்டு வரப்படும் மாடு, ஆடு, கோழி உள்ளிட்டவைகளுக்கு கடந்த 1-ந் தேதி முதல் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டது. கட்டணம் அதிகரித்த பிறகும் நேற்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். 
மேலும் சந்தைக்கு வந்தவர்களிடம் மாநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முககவசம் அணியாமலும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்த சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்