எண்ணூர் விரைவு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட எண்ணூர் விரைவு சாலையில் பஸ், கன்டெய்னர் லாரி போன்ற கனரக வாகனங்கள் தினமும் ஏராளமாக செல்கின்றன.

Update: 2021-10-12 04:00 GMT
இங்குள்ள சர்வீஸ் சாலையில் தனியார் சிலர் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சர்வீஸ் சாலையில் மோட்டார் சைக்கிள், சைக்கிள் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுவதோடு, விபத்துகளும் ஏற்படுகிறது. 

இதையடுத்து திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர் பால்தங்கதுரை தலைமையில் செயற்பொறியாளர் உசேன், உதவி செயற்பொறியாளர் ஆனந்த ராவ், உதவி பொறியாளர்கள் சம்பத்குமார், ஹேமந்த்குமார் ஆகியோர் திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசாருடன் நேற்று காலை எண்ணூர் விரைவு சாலையில் சுங்கச்சாவடி முதல் எல்லையம்மன் கோவில் தெரு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த காய்கறி கடைகள், பெட்டிக்கடைகள், மெக்கானிக் ஷெட் போன்றவைகளை மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றினர்.

மேலும் செய்திகள்