திருத்தணி ஆர்.டி.ஓ.அலுவலகம் முன்பு சாதி சான்றிதழ் கேட்டு பொதுமக்கள் உண்ணாவிரதம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை வந்து சாதி சான்றிதழ் வழங்க கோரி உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2021-10-12 10:31 GMT
இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்களை கலைந்து செல்லுங்கள் என்று கூறியதால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு சம்பவ இடத்திற்கு திருத்தணி ஆர்.டி.ஓ.சத்யா விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு கலெக்டரிடம் முழுமையாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த பெரியசாமி (வயது 83) என்பவர் சாதி சான்றிதழ் வழங்க கோரி திடீரென தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். உடனே அவரை சிகிச்சைக்காக போலீசார் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மேலும் செய்திகள்