செல்போன் கடையில் திருடிய வடமாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது

ஆரணியில் உள்ள செல்போன் உதிரிபாக கடையை உடைத்து திருட்டில் ஈடுபட்டு தப்பிய வடமாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் இரண்டே நாட்களில் கண்டுபிடித்து அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2021-10-12 18:36 GMT
ஆரணி

ஆரணியில் உள்ள செல்போன் உதிரிபாக கடையை உடைத்து திருட்டில் ஈடுபட்டு தப்பிய வடமாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் இரண்டே நாட்களில் கண்டுபிடித்து அதிரடியாக கைது செய்தனர்.

செல்போன்  உதிரிபாகம்

ஆரணி டவுன் கேசவன் தெருவை சேர்ந்தவர் தீப்சிங் (வயது 28). இவர் ஆரணி காந்தி ரோட்டில் உள்ள பி.ஜி.எம். காம்ப்ளக்ஸில் செல்போன் பழுது நீக்கும் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 8-ந் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது வெளி கேட் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. உள்ளே சென்றபோது மற்ற கதவுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை 

இது சம்பந்தமாக ஆரணி நகர போலீசில் தீப்சிங் புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் தருமன், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு சம்பந்தமாக விசாரணை நடத்தினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வந்தனர்.
பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் தீப்சிங்கின் நெருங்கிய நண்பரான ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜலாம் சிங் ரத்தோர் (27) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையின் பூட்டுக்கு கள்ளச்சாவி தயாரிப்பதற்காக நோட்டமிட்டது தெரிய வந்தது. 

இதற்கு உடந்தையாக அவரது நண்பர்களான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விக்ரம் சிங் (27), ரகுல் சிங் (30) ஆகிேயாரும் இருந்துள்ளனர். 

3 பேரும் கைது

இதனையடுத்து 3 பேரையும் போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருடிய செல்போன் உதிரிபாகங்களை ராணிப்பேட்டை மாவட்டம் விளாப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரி அருகாமையில் மறைத்து வைத்திருப்பதாக ெதரிவித்தனர். இதனையடுத்து ஆரணி நகர போலீசார் அங்கு சென்று அவற்றை பறிமுதல் செய்து ஜலாம் சிங் ரத்தோர், விக்ரம்சிங் மற்றும் ரகுல்சிங்கை கைது செய்தனர. பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருட்டு நடந்த இரண்டே நாட்களில் தொடர்புடையவர்களை போலீசார் ைகது செய்ததை உயர் ேபாலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்