கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களில் 3 பேருக்கு கலர் டி.வி.

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களில் குலுக்கல் முறையில்தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கு கலர் டிவி பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

Update: 2021-10-12 19:36 GMT
திருப்பத்தூர்

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களில் குலுக்கல் முறையில்தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கு கலர் டி.வி.பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
 
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 10-ந் தேதி நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்துபவர்களில் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு எல்.இ.டி. கலர் டி.வி. வழங்கப்படும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா அறிவித்து இருந்தார். 

அதன்படி முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் 3 பேரை தேர்ந்தெடுக்க கணினி குலுக்கல் முறை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குழுக்கல் முறையில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், புதூர்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நெல்லிபட்டு கிராமத்தை சேர்ந்த பாப்பாத்தி, ஜோலார்பேட்டை ஒன்றியம், வெலக்கல்நத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஏரியூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம், வள்ளிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், விஜிலாபுரம் கிராமத்தை தமிழ்செல்வி ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா கலர் டி.வி.யை பரிசாக வழங்கினார்.

மேலும் ஆறுதல் பரிசாக கந்திலி ஒன்றியம் ரகுபதியூர் மதி, மாதனூர் ஒன்றியம் ஜமின் கிராமத்தை சேர்ந்த இந்துமதி, நாட்டறம்பள்ளி ஒன்றியம் வடக்குப்படு புஷ்பா ஆகியோருக்கு டிபன் கேரியர் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்