சாமி சிலைகளை உடைத்த வழக்கில் கைதானவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி

சாமி சிலைகளை உடைத்த வழக்கில் கைதானவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2021-10-12 20:11 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவிலான பெரியசாமி, செங்கமலையார் கோவில்களில் சாமி சிலைகளையும், பெரியாண்டவர் கோவில் சாமி சிலைகளையும், அம்பாள் நகரில் உள்ள சித்தர்கள் கோவில் சாமி சிலைகளையும் உடைத்ததாக கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் தாலுகா, கால்நாட்டான்புலியூரை சேர்ந்த நாதனை (வயது 38) பெரம்பலூர் போலீசார் கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தான் குற்றம் செய்யவில்லை என்றும், தன்னை விடுவிக்கக்கோரியும் சிறையில் இரவில் வழங்கப்பட்ட உணவை நாதன் சாப்பிட மறுத்துள்ளார். பின்னர் நாதனை சிகிச்சைக்காக போலீசார் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கும் அவர் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதோடு, சிகிச்சை அளிக்கவும் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து நாதனிடம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியான லதா குறைகளை கேட்டறிந்தார். நாதனை நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்