விபத்தில் சிக்கியவரிடம் இருந்து ரூ.30 ஆயிரத்தை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

விபத்தில் சிக்கியவரிடம் இருந்து ரூ.30 ஆயிரத்தை மீட்டு அவரது உறவினர்களிடம் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கொடுத்தனர்.

Update: 2021-10-13 18:25 GMT
அன்னவாசல்:
இலுப்பூர் அருகே கோவிந்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பண்டியன் (வயது 49). இவர், ஒரு மோட்டார் சைக்கிளில் இலுப்பூரில் இருந்து கோவிந்தநாயக்கன்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து படுகாயமடைந்தவர் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து இலுப்பூரில் உள்ள 108 ஆம்புலன்சிற்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் தேவபாஸ்கரன், உதவியாளர் பூபதிராஜா ஆகியோர் காயமடைந்த பண்டியனை மீட்டபோது அந்த இடத்தில் ரூ.30 ஆயிரம் பணம், செல்போன், ஆதார், ரேஷன்அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் கீழே கிடந்துள்ளன. இதனையடுத்து பாண்டியனை ஆம்புலன்ஸ் மூலம் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர். பின்னர் அவரது செல்போனில் இருந்து பாண்டியனின் உறவினர்களை வரவழைத்து பணம் செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்தனர். சரியான நேரத்தில் பணத்தை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்த  தேவபாஸ்கரன், பூபதிராஜாவை பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்