தர்மபுரியில் குழந்தை பாதுகாப்பு அதிகாரி தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு

தர்மபுரியில் குழந்தை பாதுகாப்பு அலுவலர் குடும்ப தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-14 05:58 GMT
தர்மபுரி:
தர்மபுரியில் குழந்தை பாதுகாப்பு அலுவலர் குடும்ப தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத்தகராறு
தர்மபுரியில் குழந்தை பாதுகாப்பு அலுவலராக பணிபுரிந்து வந்தவர் சித்தார்த்தன் (வயது 45). இவருக்கு வளர்மதி (36) என்ற மனைவியும், 3 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த சித்தார்த்தன் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு கொண்டார். அதற்கு முன் தனது ஆண் குழந்தையின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியதாக கூறப்படுகிறது. இதில் அந்த குழந்தை மயங்கி கிடந்தது.
தற்கொலை
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தூக்கில் தொங்கிய சித்தார்த்தன் மற்றும் மயக்கமடைந்த குழந்தையை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது சித்தார்த்தன் இறந்திருப்பது தெரியவந்தது. மயக்கமடைந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
குடும்ப தகராறில் சித்தார்த்தன் எடுத்த இந்த விபரீத முடிவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்