செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதரவற்ற முஸ்லிம் பெண்கள் மகளிர் உதவும் சங்கத்தில் சேரலாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதரவற்ற முஸ்லிம் பெண்கள் மகளிர் உதவும் சங்கத்தில் சேரலாம் கலெக்டர் தகவல்.

Update: 2021-10-14 19:57 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிருக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் பதிவு செய்யப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இச்சங்கம் புதுப்பிக்கப்படவுள்ளதால், சங்கத்தில் உறுப்பினராக சேர விரும்புவோர் செங்கல்பட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி, உரிய சந்தா தொகையினை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

சங்கத்தின் மூலம் ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் சிறுதொழில் புரியவும், மருத்துவ உதவி மற்றும் கல்வி உதவித் தொகை வழங்குதல், சுயதொழில் செய்ய பயிற்சி அளித்தல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவி பெற விரும்புவோர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி மனு செய்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்