தேர்தல் முன்விரோதத்தில் வக்கீல் வீடு சூறை இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி உள்பட 13 பேர் மீது வழக்கு

திருக்கோவிலூர் அருகே தேர்தல் முன்விரோதத்தில் வக்கீல் வீடு சூறை இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி உள்பட 13 பேர் மீது வழக்கு

Update: 2021-10-15 18:06 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள கனகநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வக்கீல் செம்மலை (வயது 42). அதே ஊரை சேர்ந்தவர் ராமசாமி(48). இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினராக உள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராமசாமி தோல்வி அடைந்தார். தனது தோல்விக்கு வக்கீல் செம்மலை தான் காரணம் என்று நினைத்து ஆத்திரமடைந்த ராமசாமி தனது மனைவி, மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் சேர்ந்து செம்மலையின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த காலி சிலிண்டரால் வீட்டின் கதவை அடித்து உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இது குறித்து செம்மலை கொடுத்த புகாரின் பேரில் ராமசாமி, இவரது மனைவி அலமேலு(42), மகன்கள் லெனின்(20), சேகுவாரா(16), ஜனசக்தி(18), அதே ஊரை சேர்ந்த கோவிந்தன்(65), இவரது மனைவி சேவா(55), சந்திரகாசு மகன் கோவிந்தன்(45), இவரது மனைவி சரிதா(35), குப்பன் மகன் ரமேஷ்(26), மேமாலூர் கிராமம் அஞ்சாமணி, வடக்குநெமிலி கலர்புரம் கிராமம் விஜய்(35), சிவனார் தாங்கல் கிராமம் சுப்பிரமணி மகன் மணி(25) ஆகிய 13 பேர் மீது திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்