தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்

சங்கரன்கோவில் அருகே பள்ளி தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டார்.

Update: 2021-10-15 19:55 GMT
சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை முதலாவது தெருவைச் சேர்ந்தவர் பார்த்தீபன் (வயது 58). இவர் அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

சம்பவத்தன்று பார்த்தீபன் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகில் வளைவில் திரும்பியபோது சிலர் சாலையில் நின்றதாக கூறப்படுகிறது. அவர்களை சாலையோரமாக நிற்குமாறு பார்த்தீபன் கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அவர்கள் பார்த்தீபனை சரமாரியாக அடித்து உதைத்து, தாக்கினர். இதில் காயமடைந்த அவர் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்த புகாரின்ேபரில், சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சங்கரன்கோவில் புதுமனை முதலாவது தெருவைச் சேர்ந்த முருகன், கணேசன், சங்கர், முத்துவேல் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள். தலைமை ஆசிரியரை சரமாரியாக அடித்து உதைத்த காட்சி சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்