தடையை மீறிய 5 பேர் மீது வழக்கு

எருதுகட்டு விழாவில் தடையை மீறிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-10-20 17:38 GMT
சிங்கம்புணரி, 
சிங்கம்புணரியில் உள்ள சேவுகப்பெருமாள் அய்யனார் திருக்கோவிலுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு புரவி எடுப்பு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து எருதுகட்டு விழா நடந்தது. இந் நிலையில் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி இல்லாத காரணத்தால் எருதுகட்டு விழா குழுவினர் மஞ்சு விரட்டு நடத்த ஏற்பாடு செய்யவில்லை. 
இருப்பினும் இந்த பகுதியை சேர்ந்த ஒரு சிலர் தங்கள் மாடுகளை சிங்கம் புணரி சீரணி அரங்கம் அருகே கொண்டு வந்து அவிழ்த்து விட்டனர். இதையடுத்து தடையைமீறி மாடுகளை அவிழ்த்து விட்ட மருதுபாண்டி, சங்கிலிகுமார், குகன், சுரேஷ், விக்னேசு வரன் ஆகிய 5 பேர் மீது சிங்கம்புணரி போலீசார் வழக்குப ்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்