பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை

பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.கூறினார்.

Update: 2021-10-21 10:40 GMT
அவினாசி, 
பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.கூறினார். 
பா.ஜனதா
இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி சாதனை விழா அவினாசி அரசு மருத்துவ மனை வளாகத்தில் நேற்று நடந்தது. பா.ஜனதா மாவட்ட செயலாளர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் கதிர்வேல், கண்ணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
விழாவில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கொரோன காலத்தில் சிறப்பாக சேவை புரிந்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டி பேசும்போது இந்தியா கொரோனோ தடுப்பூசி 100 கோடி இலக்கை எட்டியுள்ளது.  தொடர்ச்சியாக நாட்டு மக்கள் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு நாட்டை பிரதமர் மோடி  வழி நடத்தி செல்கிறார் என்றார். 
அதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்தும் சோதனை என்பது ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்றால் முதல்-அமைச்சர் முதலில் அவருடைய அமைச்சரவை சகாக்களில் இருந்து தொடங்க வேண்டும்.  ஊழல் என்று வந்துவிட்டால் முதல்-அமைச்சர் அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசியல் காரணத்திற்காக அரசியல் ரீதியாக பழி வாங்கும் நடவடிக்கையாக  இருக்கக் கூடாது.  உள்ளாட்சி தேர்தல் முழுமையாக விரைவில் நடத்தப்பட வேண்டும். 
பெட்ரோல், டீசல்
பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர நிச்சயம் வாய்ப்பு உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இடம் பெயர்ந்த பொதுமக்கள் ஆதார் கார்டு இருந்தால் தாராளமாக தடுப்பூசி ஊசி போட்டுக் கொள்ளலாம். ஒரு சில நபர்கள் இந்த நாட்டில் தங்குவதற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லாதபோதுதான் அவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் யோசிக்கும் நிலை உள்ளது.
 இவ்வாறு அவர் கூறினார்.
-
Reporter : S. Thirungnanasampandam  Location : Tirupur - Avinashi

மேலும் செய்திகள்