சாராயம் காய்ச்சுவதற்காக கடத்திய சர்க்கரை பறிமுதல்

சாராயம் காய்ச்சுவதற்காக சர்க்கரை கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-21 18:33 GMT
சங்கராபுரம், 

சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம்-பூட்டை செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அதில் யூரியா உரமூட்டை, கலைக்கொல்லி மருத்துகளுக்கு இடையே 120 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்காக சர்க்கரை மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த டிரைவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 32) என்பதும், சாராயம் காய்ச்சுவதற்காக சக்கரையை கடத்தி சென்றதும் தெரியவந்தது.  இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்ததோடு,அவரிடம் இருந்து சாராயம், 2,250 கிலோ எடை கொண்ட சர்க்கரை மூட்டைகள், வாகனம் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சர்க்கரை கடத்தல் தொடர்பாக குரும்பாலூர் கிராமத்தைச் சேர்ந்த மாயவன் மற்றும் வாகன  உரிமையாளரான சேராப்பட்டு கிராமத்தை சேர்ந்த அஜித் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்