போக்குவரத்து தொழிலாளர்கள் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்

Update: 2021-10-22 13:25 GMT
கோத்தகிரி

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு போனஸ் பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோத்தகிரியில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோத்தகிரி காமராஜர் சதுக்கம் அரசு போக்குவரத்து பணிமனை அருகே நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் கிளை செயலாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் எம்.சாமிநாதன், பொருளாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சட்டப்படி குறைந்தபட்ச கூலி மற்றும் தீபாவளி போனஸ் 25 சதவீதம் வழங்க வேண்டும்.

வரவுக்கும், செலவுக்கும் உள்ள வேறுபாட்டு தொகையை தொழிலாளர்களுக்கு வழங்கும் வகையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அகவிலைப்படி உயர்வு நிலுவை தொகையை வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்