பலத்த மழையால் குடியிருப்பு பகுதியில் குளமாக தேங்கிய தண்ணீர்

செவல்பட்டி அருகே பலத்த மழையால் குடியிருப்பு பகுதியில் குளமாக தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2021-10-22 19:22 GMT
தாயில்பட்டி
செவல்பட்டி அருகே பலத்த மழையால் குடியிருப்பு பகுதியில் குளமாக தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பலத்த மழை
வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டி, அம்மையார்பட்டி, அலமேலு மங்கைபுரம், துலுக்கன்குறிச்சி, வெம்பக்கோட்டை, கொட்டமடக்கிபட்டி, இ.மீனாட்சிபுரம், கஸ்தூரிரெங்கபுரம், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மாலை 4 மணி முதல் சுமார் 1 மணி நேரம் நீடித்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
ஆனால் கனமழையால் துலுக்கன்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த அருந்ததியர் காலனியில் சுமார் நூறு குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் மழை நீரை வெளியேற்ற முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். 
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஏற்கனவே அருந்ததியர் காலனியில் உள்ள வீடுகள் மிகவும் சேதமடைந்துள்ளதாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் சீரமைக்கப்படவில்லை. மழை தொடர்ந்து நீடிப்பதால் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி இருப்பதால் தற்போது உள்ள வீடுகள் மேலும் சேதமடைய வாய்ப்புள்ளது என குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வெளியே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சேதமடைந்த வீடுகளை பராமரிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் சப்ளை நிறுத்தப்பட்டதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்