கடல் உள்வாங்கி, மணல் பரப்பாக மாறியது

கடல் உள்வாங்கி, மணல் பரப்பாக மாறியது

Update: 2021-10-23 17:56 GMT
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குருசடை தீவை ஒட்டியுள்ள குந்துகால் கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக நேற்று சுமார் 200 மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் அங்கு கடல் பகுதி வெறும் மணல் பரப்பாக மாறி காட்சி அளித்தது. இதனால் கடலில் உள்ள சிப்பி, பாசிகள் உள்ளிட்டவை  மணல் பரப்பில் தெளிவாக தெரிந்தன. 
அதே நேரத்தில் பகல் ஒரு மணிக்கு பிறகு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதேபோல் பாம்பன், சின்னப்பாலம், தோப்புக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று காலையில் கடல் உள்வாங்கிேய காணப்பட்டது.

மேலும் செய்திகள்