நெல்லிக்குப்பத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

வடகிழக்கு பருவமழையையொட்டி நெல்லிக்குப்பத்தில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-10-23 19:06 GMT
நெல்லிக்குப்பம், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையடுத்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி நெல்லிக்குப்பம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சிவா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் திருமாவளவன் ஆகியோர் முன்னிலையில் தற்காலிக மிதவை படகு, உயிர்காக்கும் கருவிகள், மிதவை பலூன்கள் கருவிகள் ஆகியவற்றை கொண்டு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது பற்றி நெல்லிக்குப்பம் கோவில் குளத்தில் செயல்விளக்கம் அளித்தனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியின் போது, மழைக்காலத்தில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது பற்றி  தீயணைப்பு வீரர்கள் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது சமூக ஆர்வலர்கள் புருஷோத்தமன், சீசப்பிள்ளை, செல்வராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்