கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மனிதசங்கிலி போராட்டம்

கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மனிதசங்கிலி போராட்டம் உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை

Update: 2021-10-25 16:41 GMT
கள்ளக்குறிச்சி

உயரம் வளர்ச்சி தடைபட்டோர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் சாந்தி, துணைத்தலைவர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

உயரம் வளர்ச்சி தடைபட்டோரை கடும் ஊனமுற்றோராக அறிவித்து திட்டங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும், வீடு கட்டித்தர வேண்டும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான சிறப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், குழு உறுப்பினர்கள் அஞ்சலை, அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்