மொபட்டில் இருந்து கீழே விழுந்த வாலிபர் சாவு

மொபட்டில் இருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2021-10-26 20:04 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள வைப்பூர் கீழத்தெருவை சேர்ந்தவர் முத்து(வயது 31). இவர் நேற்று முன்தினம் விக்கிரமங்கலம் அருகே உள்ள குமணந்துறைக்கு தனது அக்காள் ராதிகாவை பார்ப்பதற்காக வைப்பூரில் இருந்து தனது மொபட்டில் சென்றார். சாத்தம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சென்றபோது நிலைதடுமாறி மொபட்டில் இருந்து முத்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. சாலையின் ஓரத்தில் விழுந்து கிடந்த முத்துவை சாத்தம்பாடியில் உள்ள உறவினர் ஒருவர் மீட்டு குமணந்துறையில் உள்ள ராதிகா வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு இரவில் தங்கி இருந்த முத்து இறந்துவிட்டார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் முத்துவின் தந்தை பரமசிவம் அளித்த புகாரின்பேரில், முத்துவின் உடலை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்