சென்னையில் முக கவசம் அணியாமல் வந்த 1,881 பேர் மீது வழக்கு

சென்னையில் நேற்று முக கவசம் அணியாமல் வந்த 1,881 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-10-28 06:45 GMT
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மக்கள் புத்தாடை வாங்குவதற்காக தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம் உள்பட வணிகதள பகுதிகளுக்கு வருகின்றனர். அவ்வாறு திரளாக வரும் போது கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க முக கவசம் அணியாமல் யாரும் வருகிறார்களா? என்று மாநகராட்சியும், போலீஸ் துறையும் இணைந்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில் சென்னையில் நேற்று முக கவசம் அணியாமல் வந்த 1,881 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் ரூ.3 லட்சத்து 76 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இதுவரையில் முக கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 47 ஆயிரத்து 372 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.94 லட்சத்து 74 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்