விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உரங்கள் தட்டுப்பாடின்றி வழங்கக்கோரி திருவாரூரில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-10-28 15:02 GMT
திருவாரூர்:
உரங்கள் தட்டுப்பாடின்றி வழங்கக்கோரி திருவாரூரில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தட்டுப்பாடின்றி உரங்கள்
சம்பா, தாளடி நெல் சாகுபடிக்கு தேவையான டி.ஏ.பி., யூரியா  உள்ளிட்ட ரசாயன உரங்களை தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும்.  பெருங்குடி, சுல்யாணசுந்தரபுரம், அடிப்புதுச்சேரி ஆகிய விடுபட்ட கிராமங்களுக்கு 2020-21 பயிர்க்காப்பீடு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
ஆர்ப்பாட்டம் 
அதன்படி திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாலதண்டாயுதம், ஒன்றிய செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் புலிகேசி, மாரியப்பன், தர்மதாஸ், செல்லமணி, நாகராஜன், செல்வம், சின்னதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்