மதுராந்தகம் ஏரி நிரம்பியதால் 21 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - கலெக்டர் தகவல்

மதுராந்தகம் ஏரி நிரம்பியதால் 21 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-11-09 06:03 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமானதால், மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளவான 694 மில்லியன் கன அடியை அடைந்தது. தற்போது ஏரிக்கு வரும் வெள்ள மழைநீர் உபரி நீராக கலங்கல்கள் மூலம் கிளியாற்றில் வெளியேறுகிறது. இதன் காரணமாக உபரிநீர் செல்லும் கிளியாற்றினை ஒட்டிய கருங்குழி, இருசமநல்லூர், பூதூர், ஈசூர், கத்திரிச்சேரி, விழுதமங்கலம், வளர்பிறை, முள்ளி, முன்னூத்திக்குப்பம், முருக்கஞ்சேரி, குன்னத்தூர் மற்றும் நீலமங்கலம் கிராமங்களை சார்ந்த 21 கிராம பொதுமக்கள் யாரும் ஆற்றிற்கு செல்ல வேண்டாம் எனவும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்