கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-11-11 00:56 GMT
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் பரிமேலழகன், தனி வருவாய் அலுவலர் சதீஷ் மற்றும் அதிகாரிகள் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே உத்தனப்பள்ளி பிரிவு சாலையில் நேற்று மாலை, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் 50 மூட்டைகளில் சுமார் 2½ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கர்நாடகா மாநிலம் கோலம்பள்ளி சாப்பூரை சேர்ந்த ராஜா (வயது22) என்பதும், ராயக்கோட்டை பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியுடன் சரக்கு வேனை பறிமுதல் செய்த அலுவலர்கள், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்