தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-11-17 10:42 GMT
செங்கல்பட்டு,

தேசிய அளவிலான இளைஞர் விழாவில் மத்திய அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்களுக்கும் (15 வயது முதல் 29 வயது வரையிலான) மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கும் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

11.2018 முதல் 31.12.2020 வரையிலான கலாசாரம், இளைஞர் மேம்பாட்டு பணி, சுகாதாரம், ஆராய்ச்சி, மனித உரிமைகள், கலை மற்றும் இலக்கியம், சுற்றுலா, பாரம்பரிய மருத்துவம், சமூக சேவை, விளையாட்டு மற்றும் கல்வி போன்ற சமூக நலனில் சிறப்பாக தொண்டாற்றி தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

தகுதிகள்:-

இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 15 வயது முதல் 29 வயது ஜனவரி 1-ந்தேதி 2021 முடிய பூர்த்தியாக இருக்க வேண்டும். சமூக பணியில் அதிக ஆர்வம் மற்றும் சமூக பணியாற்றி இருக்க வேண்டும். வாழ் நாளில் ஒரு முறை மட்டுமே இந்த விருது வழங்கப்படும். மத்திய, மாநில, பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், இந்த விருது பெற விண்ணப்பிக்க இயலாது.

தேசிய இளைஞர் விருது ரூ.1 லட்சம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது

பரிவு துறை சட்டம் 1860-ன்படி கடந்த 3 ஆண்டுகளுக்கு அமைப்பு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நிர்வாக குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

சமூக நலன் சார்ந்த திட்டங்களை அறிவார்ந்த தன்மையுடன் மேம்படுத்த தன்னார்வத்துடன் ஈடுபடும் தகுதியை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

எந்தவித லாப நோக்கத்துடனும் தொண்டு பணிகள் இருக்க கூடாது.

குறிப்பிட்ட ஜாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.

இதற்கு முன் இந்த விருது பெற்ற தொண்டு நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது.

குறைந்த பட்சம் 3 ஆண்டுகளாவது இளைஞர்களை சமுதாய பணிகளில் ஈடுபடும் வகையில் சிறப்பான சேவையாற்றி இருக்க வேண்டும்.

சமுதாய நலப்பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றிய புகைப்படம் மற்றும் செய்திக்குறிப்பு மற்றும் இதர ஆவணங்களுடன் சான்றொப்பம் இட்ட ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும்.

தேசிய இளைஞர் விருது ரூ.3 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது

எனவே, சமூக நலனில் சிறப்பாக தொண்டாற்றிய இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மேற்கண்ட விருதுகளுக்கு இன்று (புதன்கிழமை) க்குள் https//innovate.mygov.in/national-youthaword-2020 என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் செய்திகள்