905 இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. ஆனால் மழையால் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்களே வருகை தந்தனர்.

Update: 2021-11-18 20:12 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் 9-வது கட்டமாக 905 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று கடலூர் மாவட்டத்தில் 905 இடங்களிலும் கொரோனா தடுப்பூசி போட அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இருப்பினும் தொடர்ந்து முகாம் நடந்தது. பொதுமக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தடுப்பூசி போட வந்தனர்.

வருகை குறைந்தது

சில இடங்களில் மட்டும் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி நடந்தது. இவற்றை சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் 2-வது தவணை தடுப்பூசி போட முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் நேற்று இரவு 7 மணி வரை நடந்த முகாமில் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்களை தடுப்பூசி போட வந்தனர்.
இதில் பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்பட பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்