மாவட்டத்தில் பலத்த மழை

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-11-22 19:39 GMT
அருப்புக்கோட்டை, 
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
அருப்புக்கோட்டை 
வடகிழக்கு பருவமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த 4 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. 
இந்தநிலையில் அருப்புக்கோட்டையில் நேற்று காலை முதலே வெயில் வாட்டி வந்தது. இதையடுத்து இரவு  நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து அருப்புக்கோட்டை புளியம்பட்டி, பாளையம்பட்டி, ஆத்திப்பட்டி, காந்திநகர், ராமசாமிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 
சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் திடீர் மழை காரணமாக நகரின் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
ராஜபாளையம் 
ராஜபாளையம், சத்திரப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. 
அதேபோல வத்திராயிருப்பில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. வத்திராயிருப்பில் தாழ்வான இடங்களில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமம் அடைந்தனர். திடீரென பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்